தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா மார்ச் 28ம் தேதி இரவு 10:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி இரவு சுமார் 10.50 மணியளவில் கொடியேற்றம் நடைபெற்றது. கொடியேற்றம் நடைபெற்ற பின் கொடிமரத்துக்கு காப்பு கட்டுதல் நடைபெற்றது அதன் பின் பக்தர்கள் அனைவரும் தங்களது கைகளில் காப்பு கட்டி கொண்டனர். முக்கிய நிகழ்வான பங்குனி பொங்கல் விழா வரும் ஏப்ரல் நான்காம் தேதி நடைபெற உள்ளது.