இந்திய குடியரசு தலைவர் திரெளபதி முர்மு ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலில் இன்று மாலை பெருமாளை தரிசித்து விட்டு சாலை மார்க்கமாக காரில் புறப்பட்டு சென்றார். ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து கொள்ளிடம் கரை வழியாக திருச்சி விமான நிலையம் நோக்கி காரில் சென்றபோது கொள்ளிடம் பஞ்சக்கரை அருகே உள்ள தமிழக குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் நின்றதால் அங்கு திடீரென கீழே குடியரசுத் தலைவர் இறங்கினார்