திண்டுக்கல் தனியார் பள்ளி சார்பில் கே.ஜி, எல்.கே.ஜி, யூ.கே.ஜி, 1ஆம் வகுப்பு மற்றும் 2ஆம் வகுப்பு மழலைகள் பசுமையை வலியுறுத்தி பேரணி சென்றனர். ஆர்.எம் காலனி பகுதியில் உள்ள திண்டுக்கல் மேற்கு காவல் நிலையத்தின் காவல் ஆய்வாளர் வினோதா மழலைகளுக்கான பேரணியை தொடங்கி வைத்தார்.