ஆம்பூரைச் சேர்ந்த ஷமீல் அஹமது என்ற இளைஞரை, பள்ளிகொண்டா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அணைக்கட்டு பகுதியை சேர்ந்த பழனி என்பவரின் மனைவி பவித்ரா காணாமல் போனது தொடர்பாக விசாரிப்பதற்காக காவல்துறையினர் அழைத்துச் சென்று விசாரணையின் போது உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி அரசு சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதன் காரணமாக 191 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதன் தீர்ப்பை இன்று வெளியாக இருந்த நிலையில் வருகின்ற 28ஆம் தேதி ஒத்திவைத்து திருப்பத்தூர் மாவட்ட நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.