தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பொதுமக்களை சந்திக்கும் சுற்று பயணத்தை தொடங்குகிறார். செப்டம்பர் 13ஆம் தேதி திருச்சி மாவட்டத்தில் பிரச்சார பயணத்தை விஜய் துவங்குகிறார். இந்தப் பிரச்சார பயணத்திற்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு அளித்தார். திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் விஜய் பிரச்சார பயணம் மேற்கொண்டு பேசுவதற்கு இன்று அனுமதி வேண்டி கடிதம் அளிக்கப்பட்டது.