கொளத்தூர் ராஜமங்கலம் சிவசக்தி நகர் பிரதான சாலையில் சுல்தானம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்து கரும்புகை வெளியாகி தீ பற்றி எரிந்ததை அடுத்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்த போது அங்கிருந்த இரண்டு சிலிண்டர்கள் வெடித்ததில் கோகிலவாணி என்பவரின் வீடு முற்றிலுமாக எரிந்து சேதம் அடைந்தது மேலும் இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்