சென்னை திருவிக நகரை சேர்ந்தவர் விஜய் சங்கர் -37 இவர் ராபிட்டோவில் பைக் ஓட்டி வருகிறார்.இந்த நிலையில் கடந்த ஆண்டு அம்பத்தூர் விநாயகபுரத்தை சேர்ந்த திருமணம் ஆகி கணவனை பிரிந்து வாழ்ந்து வரும் இளம் பெண் சஜிதா பர்வின் ராபிடோ புக் செய்துள்ளார்.அப்போதிலிருந்து இருவரும் காதலித்து வந்துள்ளனர், விஜய் சங்கரிடம் சஜிதா பர்வீன் 3 லட்சத்து 80 ஆயிரம் பணம் பெற்று ஏமாற்றியுள்ளார், விஜய் சங்கர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் இந்த வழக்கில் சஜிதாவை போலீசார் கைது செய்தனர்