திருப்பூர் மாவட்டம் பல்லடம் கரைப்புதூர் பகுதியில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சூரத் என்பவரது மகள் கியூ (6) சாலையை கடக்கும் போது டிப்பர் லாரி மோதி உயிரிழந்தார். இது தொடர்பான பரபரப்பு சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விபத்திற்கு காரணமான லாரியை சிறை பிடித்து வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பல்லடம் போலீசார் விசாரணை.