கன்னிவாடி பேரூர் கழகத்திற்கு உட்பட்ட வார்டு செயலாளர்கள் மற்றும் பிஎல்2, பில்சி நிர்வாகிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கன்னிவாடி பேரூராட்சி சமுதாயக் கூட்டத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ப.க.சிவகுருசாமி தலைமை தாங்கினார். திமுக அவைத்தலைவர் காமாட்சி, மாவட்ட பொருளாளர் சத்தியமூர்த்தி, பேரூராட்சி மன்ற தலைவர் தனலெட்சுமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை கழக தேர்தல் பொறுப்பாளருமான கள்ளிப்பட்டி மணி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்