அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வேலூர் பிரச்சாரத்தில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை எச்சரித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதைக் கண்டித்து, சிவகங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம், எடப்பாடி மீது நடவடிக்கை கோரி புகார் மனு அளித்தது. அவர் மன்னிப்பு கேட்க வேண்டும், கூட்டங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என வலியுறுத்தினர்.