இந்து முன்னணியின் மாவட்ட தலைவர் ராம மூர்த்தி தலைமையில் பாஜகவினர் மற்றும் பொது மக்கள் ஆகியோர் முன்னிலையில் நகரின் முக்கிய வீதிகளில் மேல தாளத்துடன் விநாயகர் திருமேனி உருவச் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். ஊர்வலத்தின் போது சாலையின் இரு புறமும் நின்றிருந்த ஏராளமான பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்தனர் அவர்களுக்கு பிரசாதமாக பொறாகடலைகளை வழங்கிச் சென்று ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் விநாயகரின் திரு உருவமேனி சிலைகளை விசர்ஜனம் செய்யப்பட்டது.