கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் அருகே சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் புலித்தேவரின் 310 வது ஜெயந்தி விழா புலித்தேவர் மக்கள் இயக்கம் சார்பில் கொண்டாடப்பட்டது இதில் சிறப்பு அழைப்பாளராக கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு புலிதேவரின் முழு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார் தொடர்ந்து அன்னதான நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை புலி தேவர் மக்கள் இயக்க தலைவர் செல்வம் செய்திருந்தார்