பெரம்பலூர் மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற மிருணாளினி தனது முதல் பணியாக வேப்பந்தட்டை தாலுகா அரும்பாவூரில் நடந்து வரும் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார், அப்பொழுது பொதுமக்களிடம் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார், தொடர்ந்து கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார், அப்போது அரசு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.