திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே பட்டிவீரன்பட்டி என்.எஸ்.வி.வி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1979 - 1980 ம் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பயின்ற முன்னாள் மாணவிகளின் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது. மொத்தம் 55 மாணவிகள் வகுப்பில் படித்து முடித்து சென்ற நிலையில் அதில் 35 மாணவிகள் 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக சந்தித்து கொண்டனர்.