கோவில்பட்டி புது கிராமம் பகுதியில் உள்ள இல்லத்தார் பள்ளியில் இளைஞர்கள் சார்பில் கண் சிகிச்சை முகாம் அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு அழைப்பாளராக சேர்மன் கருணாநிதி மற்றும் கிழக்கு பகுதி திமுக பொறுப்பாளர் சுரேஷ் ஆகியோர் துவக்கி வைத்தனர் இதில் புது கிராமம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சார்ந்த திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு கண்களை பரிசோதனை செய்து கொண்டனர்.