சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் 73வது பிறந்தநாளை கட்சியினர் கொண்டாடினர். காமராஜர், அண்ணா சிலைகளுக்கு மாலையிட்டு, வாழ்த்து கோஷங்கள் எழுப்பி, நகர வீதிகளில் வலம் வந்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தனசேகரன் தலைமையில், ஒன்றிய செயலாளர் ராம்தாஸ் முன்னிலையில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பட்டாசு வெடித்து பொதுமக்கள், ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.