ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகர மன்ற அலுவலகத்தில் நகரமன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏழாவது வார்டு உறுப்பினர் மோகனா சண்முகம் தங்கள் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியினை நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இந்த நிலையில் போராட்டத்திற்கு நகர மன்ற தலைவர் உரிய பதிலளிக்காததால் ஏமாற்றமடைந்த அவர் நகர் மன்ற கூட்டத்தை விட்டு வெளியேறினார்