ஏலகிரிமலை, கோட்டூர் பகுதியை சேர்ந்த சஞ்சீவி மகன் நிர்மல் என்ற 8ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன் நேற்று பள்ளி விடுமுறை என்பதால் சக நண்பர்கள் அருகில் இருக்கும் விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளனர்.சக நண்பர்கள் குளிப்பதை வேடிக்கை பார்ப்பதற்காக ஆர்வத்துடன் பள்ளி மாணவன் சென்ற நிலையில் அங்கு எதிர்பாராத விதமாக கால் இடறி கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளான். இந்த சம்பவம் குறித்து ஏலகிரி மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்