ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், மாங்கரை ஊராட்சியில் நடைபெற்ற “உங்களுடன் ஸ்டாலின்“ திட்ட முகாமில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டியில் ரூ.9.91 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய நியாயவிலைக்கடையை அமைச்சர் ஐ.பெரியசாமி பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.