உச்சிப்புளி இரயில் நிலையத்திற்கும் - இராமநாதபுரம் இரயில் நிலையத்திற்கும் இடையே சக்கரைக்கோட்டை இரயில்வே கேட் அருகே மஞ்சன மாரியம்மன் கோவில் தெரு அருகில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இரயில்வே தண்டவாளத்தை கவனக் குறைவாக கடக்க முற்பட்டபோது அந்த வழியாக சென்ற இராமேஸ்வரம் மதுரை பயணிகள் இரயில் வண்டியில் அடிபட்டு பலத்த காயங்கள் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார். அந்த நபரை பற்றி தகவல் தெரிந்தால் ராமேஸ்வரம் இருப்புப்பாதை காவல் நிலைய தகவல் தெரிவிக்குமாறு போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்