மிட்டுர் பகுதியில் மாடப்பள்ளி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்திற்கு சொந்தமான 4ஏக்கர் நிலம் இந்த நிலத்தை அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவர் குந்தகைக்கு எடுத்து தக்காளி செடி சாகுபடி செய்துள்ளார். இந்த நிலையில் அறுவடைக்கு தயாராக உள்ள தக்காளியின் விலை தற்போது கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது இதன் காரணமாக ஒரு கிலோ தக்காளி 8அல்லது 10ரூ என விற்கப்படுவத தக்காளி சாகுபடியில் போட்ட முதல் பணம் கூட வரவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.மேலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் தக்காளி அழுகி கீழே விழுந்தும் நாசமாகி உள்ளது என ஆதங்கம் தெரிவித்தனர்.