தெற்கு சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ரமேஷ் மதுபோதையில் சின்னதுகவூர் அருகே விபத்தில் காயமடைந்தார். அருகில் உள்ளவர்கள் கொடுத்த தகவலின் பெயரில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், ரமேஷை பரிசோதித்து விட்டு போதையில் உள்ளதாக கூறி விட்டு சென்றார். மேலும் ஒரு மணி நேரம் கழித்து அங்கு வந்த ஆம்புலன்ஸ் டிரைவர் ரமேஷை அழைத்து சென்று இளையான்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தார். ஆனால் ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். ஆம்புலன்ஸ் டிரைவரின் அஜாக்கிரதையால்தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டதாக கூறி ரமேஷின் உறவினர்கள் மருத்துவமனையில் குவிந்தனர்.