சிவகங்கை மாவட்டம் காரைக்குடி KMC காலனி பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார் (20). இவருக்கும் சத்யா நகர் பகுதி இளைஞர்களுக்கும் பன்னி வளர்ப்பு தொடர்பாக தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை காரைக்குடி உதயம் நகர் பகுதியில் நடந்து சென்ற சுரேஷ்குமாரை, 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்து அருவாளால் வெட்டியது. பின்னர், இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்று தலைமறைவாகினர்.