வண்ணாரப்பேட்டை எம். சி.ரோடு ஜி.ஏ.ரோடு சுற்றுவட்டார பகுதியில் ஸ்மார்ட் சிட்டி பணி நடைபெறுவதால் வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்நிலையில் சாலையோர வியாபாரிகளை கண்டித்து இன்று துணி கடை வியாபாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர் இதனை அறிந்து ராயபுரம் எம்எல்ஏ ஐட்ரீம் மூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து கடை வியாபாரிகளிடம் சமரச பேச்சுவார்த்தை ஈடுபட்டார் இதனை தொடர்ந்து சாலையோர வியாபாரிகளை பணி நடைபெறும் வரை கடை போட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்.