திருப்பூர் மாநகர காவல் நிலையத்திற்கு உட்பட்ட திருமுருகன்பூண்டி பெருமாநல்லூர் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர் ஒருவர் வாலிபரிடம் இருந்து ஹெட் போன் பறிப்பில் ஈடுபட்டார். இது தொடர்பான விசாரணையில் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று அவருக்கு கட்டாய பணி ஓய்வு அளித்து மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.