வடலூரில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை வேளாண் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். சென்னையில் தமிழக முதலமைச்சர் பஞ்சாப் முதலமைச்சர் ஆகியோர் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தனர். இதனைத் தொடர்ந்து வடலூரில் எஸ்.கே. ஈடன் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தொடங்கி வைத்து குழந்தைகளுடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.