திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த ஜெயபுரம் பகுதியில் அனுமதியின்றி விவசாய நிலத்தில் மணல் திருட்டு நடைபெற்று வருவதாக இன்று திருப்பத்தூர் மாவட்ட எஸ்பி சியாமளா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியா உத்தரவின் பேரில் கந்திலி போலிசார் ஜெயபுரம் பகுதியில் அனுமதியின்றி மணல் திருட்டில் ஈடுபட்டதாக ஒரு ஜேசிபி இயந்திரம் மற்றும் டிராக்டரை போலிசார் பறிமுதல் செய்தனர்.