கோவில்பட்டி புது கிராமம் வ உ சி நகர் தாமஸ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சார்ந்த இளைஞர்கள் இன்ஸ்டாகிராமில் அரிவாள் மற்றும் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரீல் பதிவு செய்துள்ளனர் இந்நிலையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் அரிவாள் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் ரீல்ஸ் பதிவு செய்த புது கிராமம் பகுதியைச் சார்ந்த சக்திவேல் வ உ சி நகர் பகுதியைச் சார்ந்த சபேஸ்வரன் தாமஸ் நகர் பகுதியைச் சார்ந்த பிரவீன் மற்றும் 18 வயது நிரம்பாத நான்கு சிறுவர்கள் என மொத்தம் ஏழு பேரை கிழக்கு காவல் நிலைய போலீசார் கைது செய்தனர்