ஈசாந்தி மங்கலத்தை சேர்ந்த அபிஷேக் அவரது நண்பர் ஆகாஷ் இருவரும் நேற்று மாலை இருசக்கர வாகனத்தில் திட்டுவிளை நோக்கி சென்று கொண்டிருந்தனர் மாங்குளம் பகுதியில் சென்ற போது பள்ளி வேனை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த சொகுசு கார் மோதி இருவரும் உயிரிழந்தனர். விபத்தை ஏற்படுத்திய நபர்களை கைது செய்ய வலியுறுத்தி உறவினர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்