கொடைக்கானல் ஏரிச்சாலையில் தனியார் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியை நடத்தி வரும் லிபு என்பவர் கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளை ஓட்டல் முன்பு நிறுத்தி இருந்தார். பூம்பாறை மேல்மலை செல்லும் சாலையில் அந்த மோட்டார் சைக்கிள் கேட்பாரற்று கிடந்தது. இது குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது அங்கு நின்றிருந்தது ஓட்டல் உரிமையாளர் லிபுவின் பைக் என தெரிய வந்தது.