திண்டுக்கல் மாவட்டம் நத்தம் குட்டுப்பட்டி வழியாக மலையூர் செல்லும் வழியில் வனப்பகுதியில் அருவி உள்ளது. இவ்வழியாக மலையூரில் வசிக்கும் மக்கள் மட்டும் இரு சக்கர வாகனங்களில் செல்ல அனுமதி உள்ளது. அருவி பகுதியில் அசைவ உணவுகளை சமைத்து மது அருந்தி கும்மாளமிட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதி வழியாக கடந்து செல்லும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். மேலும் காலி மது பாட்டில்களை வனப்பகுதிக்குள்ளேயே விட்டுச் செல்கின்றனர்.