திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த சொரக்காய் பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் யுவராஜ் (35) இவர் ஆவடியில் உள்ள ஆயுதப் படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் இன்று மாலை ஆவடியில் இருந்து சொரக்காய் பேட்டையில் உள்ள அவரது வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிப்பாடி பகுதியில் வந்தபோது லாரி இருசக்கரம் வாகனம் மீது மோதிய விபத்தில் காவலர் யுவராஜ்க்கு தலைப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டது.