திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் உள்ள சுற்றுலா மாளிகையில் இன்று திருப்பத்தூர் மாவட்டத்தில், அனைத்துத்துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து அனைத்துத்துறை முதல்நிலை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கலந்து கொண்டு ஆய்வு மேற்கொண்டார்.