திருப்பத்தூர் நகராட்சி ராமக்கபேட்டை பகுதியில் இன்று குறுமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் வீரபத்திரன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.