கருங்கல் அருகே உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் பால்ரத்தினம் இவரது தோட்டத்தில் நேற்று மரத்தில் ஏழு அடி நீளமுள்ள ராட்சச மலைப்பாம்பு இருந்ததை பார்த்த பொதுமக்கள் குலசேகரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் சம்பவ இடத்திற்குச் சென்ற வனத்துறை ஊழியர்கள் மற்றும் பாம்பு பிடி வீரர்கள் நீண்ட நேரம் போராடி மரத்தில் பதுங்கி இருந்த மலை பாம்பை மீட்டு அடர்ந்த வனப் பகுதிக்குள் விட்டனர். மரத்தில் பாம்பு பதுங்கிய வீடியோ காட்சிகள் இன்று சமூக வலைதளத்தில் வைரலானது.