தஞ்சாவூர் மாவட்டம்ஒரத்தநாடு அருகே நடுவிக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் பேராவூரணி பாஜக வடக்கு ஒன்றிய தலைவர் ராஜேஷ் குமார் என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அதை திருப்பித் தராமல் தலைமறைவாகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்த சக்திவேலுவின் தம்பி பிரகதீஸ்வரன் இடம் பணத்தை கொடுக்க வற்புறுத்தி அவரை ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்துள்ளார் ராஜேஷ் குமார். இந்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.