காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 49 வது வார்டு உட்பட்ட தும்பவனம் பகுதியில் தும்பவனத்தம்மன் ஆலயம் அமைந்துள்ளது இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வருகிறது. அந்த வகையில் தும்பவனத்தும்மன் கோவிலில் இன்று புதிய அறங்காவலர்கள் தேர்வு செய்யும் பணி நடைபெற்றது இதில் காஞ்சிபுரம் இந்து சமய அறநிலைத்துறை ஆய்வார் அலமேலு முன்னிலையில் விமல் தாஸ் விஜயலட்சுமி சண்முகம் ஆகியோர் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்