மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் சோமநாதபுரம் என்ற இடத்தில் திமுக இளைஞரணி சார்பில் 15 லட்சம் மதிப்பீட்டில் கலைஞர் நூலகம் கட்டி முடிக்கப்பட்டது. ஆயிரம் சதுர அடியில் சுமார் 3 ஆயிரம் புத்தகங்கள் இடம் பெறும் வகையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தினை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் ரிப்பன் கட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் எம்எல்ஏக்கள் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், முருகேசன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்