திண்டுக்கல் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளியில் இன்று 113 ஆவது விளையாட்டுப் போட்டிகள் பள்ளி தாளாளர் மரியநாதன் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றினார். பள்ளி முன்னாள் மாணவரும், சென்னை என். டி. டி. டேட்டா நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் நிரஞ்சன் குமார் மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். முன்னாள் மாணவரும், கால்பந்து கழக மாநில தலைவருமான சண்முகம் கலந்து கொண்டு ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்தார்.