பிள்ளையார்பட்டியில் விநாயகர் சதுர்த்தி பெருவிழாவை மூன்னிட்டு ஆக 18-ல் கொடியேற்றத்துடன் தொடங்கிய 10 நாள் விழாவில்,கற்பக விநாயகர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார்.6-ம் நாள் வெள்ளி யானை வாகனத்தில் சூரசம்ஹாரமும்,நேற்று திருத்தேரோட்டம் நடந்தது.இன்று அதிகாலை முதல் பக்தர்கள் சாரை சாரையாக வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். காலை 10 மணிக்கு தீர்த்தவாரி,மதியம் ராட்சத கொழுக்கட்டை படையல் நடைபெற உள்ளது.