விருதுநகர் ஆட்சியரகம் ஆப்த மித்ரா திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட விருதுநகர் மாவட்டச் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு ரூபாய் 16 லட்சத்து 97,420 மதிப்பில் டிரோன் மீட்பு படகு மரம் வெட்டும் கருவி பாதுகாப்பு தலைக் கவசம் தீயணைப்பு கருவி உள்ளிட்ட 17 வகையான மீட்பு கருவிகளை மாவட்ட தீயணைப்பு அலுவலர் திரு சந்திரகுமாரிடம் ஆட்சியர் சுகபுத்ரா வழங்கினார். நிகழ்ச்சியில் தீயணைப்பு வீரர்கள் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.