வருகின்ற 21ஆம் தேதி எடப்பாடி பழனிச்சாமி காஞ்சிபுரத்தில் உள்ள உத்திரமேரூர், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் காரப்பேட்டை உள்ள தனியார் விடுதியில் மாவட்ட செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் எஸ் பி வேலுமணி ஆர்.பி.உதயகுமார் மற்றும் வைகை செல்வன் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பல்வேறு ஆலோசனைகள