ஜோலார்பேட்டை நகராட்சி இடையம்பட்டி பகுதியிலுள்ள சிறு விளையாட்டு அரங்கில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள் துவக்க விழா இன்று மாவட்ட கலெக்டர் சிவ செளந்திரவல்லி தலைமையில் நடைபெற்றது. இதில் திருப்பத்தூர் மாவட்ட திமுக செயலாளரும் ஜோலார்பேட்டை எம்எல்ஏவுமான தேவராஜ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.