திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள ராஜக்காபட்டி R கல்லுப்பட்டியில் ஐந்துக்கும் மேற்பட்ட சமுதாய மக்கள் வாழ்ந்து வருவதாகவும் ஊரின் மத்தியில் அனைவருக்கும் பொதுவாக மாரியம்மன் கோயில் உள்ளதாகவும் இந்த கோயிலில் பல வருடங்களாக அனைவரும் ஒன்றிணைந்து சாமி கும்பிட்டு வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக குறிப்பிட்ட ஒரு சமுதாயத்தை சேர்ந்தவர்கள் தங்கள் அதிகம் மக்கள் தொகை உள்ளதாக கூறி மற்றொரு தரப்பினரை கோயிலுக்குள் அனுமதிப்பதில்லை.