எண்ணூர் வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வார்டு இரண்டில் இன்று உங்களுடன் ஸ்டாலின் திட்டம் நடைபெற்றது. 13 துறையைச் சேர்ந்த 43 சேவைகளுக்காக பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களுடைய புகாரின் அடிப்படையில் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டனர். திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் கே.பி.சங்கர் பொது மக்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார் இந்நிகழ்வில் பகுதி செயலாளர் வைமா அருள்தாசன், மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் உடன் இருந்தனர்.