திருப்பத்தூர் பாச்சல் பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் இன்று மாலை காவலர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக SP சியாமளாதேவி, மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் முத்துக்குமார் கோவிந்தராஜ், டிஎஸ்பி சௌமியா, திருப்பத்தூர் நகர காவல் ஆய்வாளர் ஜெயலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது, இதில் கலந்து கொண்ட காவலர்கள் மற்றும் சிறுவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.