புள்ளானேரி, எம்.எல்.ஏ வட்டம் பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகள் திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் சென்று இருந்த நிலையில் அங்கு கல்யாண விருந்து சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது இதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சிவக்குமார், பெரியண்ணன், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.