விருதுநகர் அரசு போக்குவரத்துக் கழகம் தலைமை அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் சிஐடியு சார்பில் பொதுச் செயலாளர் தலைமையில் 5வது நாள் காத்திருப்பு போராட்டம். தேர்தல் வாக்குறுதிப் படி அனைவருக்கும் பழைய பென்சன் வழங்க வேண்டும் ,உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டன.