‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ எழுச்சிப்பயணம் மேற்கொள்ளும் அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சின்னாளப்பட்டி பூஞ்சோலையில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்தபோது திண்டுக்கல் தோமையார்புரம் சந்திப்பில் அதிமுகவினர் ஒன்று சேர் ஒன்று சேர் கழகத்தை ஒன்றுசேர் என கோஷங்கள் எழுப்பி இபிஎஸ் பிரச்சார வாகனத்தை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.