தமிழகம் முழுவதிலிருந்து உலக சிவனடியார்கள் திரு கூட்டத்தின் சார்பில் 150 சிவனடியார்கள் இலங்கை செல்வதற்காக நேற்று அதிகாலை நாகை வந்தனர். ருத்ராட்சம் அணிந்தபடியும், தேவார பாடல் பாடியபடியும் துறைமுக அலுவலகத்துக்கு வந்த சிவனடியார்களுக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து அவர்கள் கப்பலில் இலங்கையில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற திருத்தல இடங்களுக்கு ஆன்மிக பயணமாக புறப்பட்டனர்.